யாழ் பல்கலைக்கழக 'ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை' உத்தியோகபூர்வமாக திறந்துவைப்பு!
6 view
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ‘ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை’ (Integrated Newsroom) நேற்றையதினம்(06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் சுவிஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹெல்வெற்றாஸ் நிறுவனத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது அமைக்கப்பட்டது. ஊடகக் கற்கைகள் துறை மாணவர்கள் அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்களில் ஒருசேரப் பயிற்சி பெறுவதற்கான வசதிகளையும் உபகரணங்களையும் கொண்டதாக செய்தியறை அமைக்கப்பட்டுள்ளது. ஹெல்வெற்றாஸ் நிறுவனம் இலங்கையின் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கும் சிந்தனை அரும்புகளங்களை (Incubator Spaces) உருவாக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக இது ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. யாழ். நகரின் ஜூம்மா பள்ளி வீதியில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஊடகக் கலையகம் அமைந்திருக்கும் வளாகத்தில் நிறுவப்பட்டிருக்கும் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு திறந்துவைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஹெல்வெற்றாஸ் சிந்தனை…
The post யாழ் பல்கலைக்கழக 'ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை' உத்தியோகபூர்வமாக திறந்துவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் பல்கலைக்கழக 'ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை' உத்தியோகபூர்வமாக திறந்துவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
