இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டவர் திடீர் மரணம்!
13 view
இலங்கையிலுள்ள பேராதனை தாவரவியல் பூங்காவை பார்வையிட வருகை தந்த, பிரித்தானிய சுற்றுலா பயணியொருவர் திடீரென உயிரிழந்ததாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சுற்றுலாப் பயணி மற்றுமொரு பெண்ணுடன் கண்டிக்கு சென்று அன்றைய தினம் தாவரவியல் பூங்காவைப் பார்வையிடச் சென்றுள்ளனர். இதன்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அவசர சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த பிரித்தானிய பிரஜை 69 வயதுடைய பெனடிக்ட்டில் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,இவர் கடந்த 22ஆம் திகதி சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டவர் திடீர் மரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டவர் திடீர் மரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
