யாழில், காணி மோசடி தொடர்பான வழக்கில் நீதிவான் நீதிமன்றம் விசேட உத்தரவு!
20 view
யாழ்ப்பாணம் நகரில் போலியான உறுதி நிறைவேற்றப்பட்டு மேற்கொள்ளப்பட்ட காணி மோசடி தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் மன்றில் முற்படுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “காணி மோசடி வழக்கில் யாழ்பபாணம் பொலிஸ் நிலைய சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் அதிருப்தி வெளியிட்ட மேலதிக நீதிவான் நளினி சுபாஸ்கரன், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். யாழ்ப்பாணம் மாநகரில் மறைந்த தம்பதியரின் சார்பில் நிறைவேற்றப்பட்ட அறுதி உறுதியின் மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினர் ஒருவரை கைது செய்தனர். சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்திய பொலிஸார் பி அறிக்கையை தாக்கல் செய்தனர். யாழ்ப்பாண மேலதிக நீதிவான் திருமதி நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. “சந்தேக நபர் இது போன்ற மோசடிகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளார். அவருக்கு எதிராக…
The post யாழில், காணி மோசடி தொடர்பான வழக்கில் நீதிவான் நீதிமன்றம் விசேட உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில், காணி மோசடி தொடர்பான வழக்கில் நீதிவான் நீதிமன்றம் விசேட உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
