புதிய வரி வசூலிப்புச் சட்டமூலத்தை தோல்வியடைய முயற்சிப்போம்-அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

38 view
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி வசூலிப்புச் சட்டமூலத்தை தோல்வியடையச் செய்வதற்கான சகல முயற்சிகளையும் முன்னெடுப்போம். இப்புதிய வரி திருத்தத்தினால், தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் காணப்படுகிறது. எனவே, அரசாங்கம் இது தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவிக்கையில், இதற்கு முன்னர் வருடத்துக்கு 30 இலட்சம் ரூபா வருமானம் பெறுபவர்களிடம் இருந்தே வருமான வரி அறவிடப்பட்டது. ஆனால், தற்போது அந்த தொகை 15 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது மாதாந்தம் சுமார் ஒன்றரை இலட்சம் சம்பளம் பெறுபவர்கள் கூட வருமான வரியை செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது. அத்தோடு குறிப்பிட்ட தொகைக்கு மேல் கட்டம் கட்டமாக அறவிடப்படும் வரியின் அளவும் 6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அடுத்தடுத்த கட்டங்களில் 36 சதவீதம் வரை அதிகரித்துச் செல்கின்றது.…
The post புதிய வரி வசூலிப்புச் சட்டமூலத்தை தோல்வியடைய முயற்சிப்போம்-அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース