புலம்பெயர்ந்தோரின் நிதியைப் பெற ரணில் நாடகம் – அரியநேத்திரன் குற்றச்சாட்டு!
35 view
“தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக 1946ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரையிலும் பல்வேறுபட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறுபட்ட ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டு பல்வேறுபட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் ரீதியான பேச்சுகளும் இடம்பெற்றன. இந்தநிலையில், தமிழ் மக்களுக்கு என்ன கொடுக்கப்பட வேண்டும் என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரிந்த விடயம். ஆனால், காலத்தை நீடித்து புலம்பெயர்ந்த மக்களின் நிதியைக் கொண்டு வருவதற்கான ஒரு நாடகமாகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் என்ற பெயரில் ரணில் தலைமையில் அமைச்சரவை உப குழு ஒன்று அமைக்கப்படுகின்றது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குற்றம் சாட்டினார். படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22 ஆவது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபியில் நேற்று (19) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு…
The post புலம்பெயர்ந்தோரின் நிதியைப் பெற ரணில் நாடகம் – அரியநேத்திரன் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புலம்பெயர்ந்தோரின் நிதியைப் பெற ரணில் நாடகம் – அரியநேத்திரன் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
