சலுகைகள் மற்றும் சம்பளம் வேண்டாம் என இராஜாங்க அமைச்சர்கள் அறிவிப்பு
31 view
கொழும்பு,செப் 08 நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு சலுகைகள் மற்றும் சம்பளம் தேவையில்லை என இன்று (08) சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட இராஜாங்க அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவது தற்போது மிக முக்கியப் பொறுப்பாகும். அதற்காக இராஜாங்க அமைச்சர்கள் என்ற வகையில் அரசாங்கத்தின் பொறுப்புக்களை ஏற்று அமைச்சுக்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் புதிய இராஜாங்க அமைச்சர் பலரும் கருத்துத் தெரிவித்தார்கள்.ஊடகத் துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தற்போதை நிலையில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஜனாதிபதியினதும் பிரதமரினதும் எதிர்பார்ப்பாகும். பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. எமக்குக் கிடைத்துள்ள அமைச்சுப் பொறுப்பு என்ன என்பதை விட வழங்கப்பட்டுள்ள பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே பிரதானமானதாகும். நாங்களும் நியாயமாக செயற்பட வேண்டியுள்ளது.…
The post சலுகைகள் மற்றும் சம்பளம் வேண்டாம் என இராஜாங்க அமைச்சர்கள் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சலுகைகள் மற்றும் சம்பளம் வேண்டாம் என இராஜாங்க அமைச்சர்கள் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
