“மகாராணி எலிசபெத் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்” – பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

30 view
மகாராணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கவலைப்பட்டதையடுத்து பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. “இன்று(வியாழக்கிழமை) காலையில் கூடுதலான பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மராணியின் உடல்நிலை குறித்து கவலை கொண்ட அவரது மருத்துவர்கள், தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பரிந்துரைத்துள்ளனர்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மகாராணி, பால்மோரல் கோட்டையில் செளகர்யமாக இருக்கிறார்,” எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. பக்கிங்காம் அரண்மனை இது போன்ற ஒரு அறிக்கையை வெளியிடுவது மிகவும் அசாதாரணமானது. பொதுவாக 96 வயதான மாராணியின் மருத்துவ விஷயங்கள் அவரது தனிப்பட்ட விவகாரமாகக் கருதப்படுவதால் அது தொடர்பான கருத்துக்கள் தவிர்க்கப்படும். மகாராணி தற்போது வசித்து வரும் ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையின் நுழைவாயில்கள் முன்பாக தடுப்புகள் போடப்பட்டுள்ளன. இளவரசர் சார்ல்ஸ், அவரது மனைவியும் கோர்ன்வால் சீமாட்டியுமான கேமில்லா, ஏன் ஆகியோர் பால்மோரலில் உள்ளனர். யார்க் கோமகன் ஆண்ட்ரூ, வெஸ்ஸெக்ஸ் சீமாட்டியான சோஃபீ அபெர்தீனுக்கு மேற்கே உள்ள ஸ்காட்டிஷ் எஸ்டேட்டுக்கு…
The post “மகாராணி எலிசபெத் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்” – பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース