சூழ்ச்சி, வஞ்சம், பகை….. பீறிடும் ‘பொன்னியின் செல்வன்’ ட்ரெய்லர்
41 view
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது. சாகாவரம் பெற்ற கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் நாவலே ‘பொன்னியின் செல்வன்’ படமாக உருவாகியுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் எதிர்வரும் 30 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயசித்ரா, பிரகாஷ்ராஜ், சோபிதா துலிபாலா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி பெரு வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர்…
The post சூழ்ச்சி, வஞ்சம், பகை….. பீறிடும் ‘பொன்னியின் செல்வன்’ ட்ரெய்லர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சூழ்ச்சி, வஞ்சம், பகை….. பீறிடும் ‘பொன்னியின் செல்வன்’ ட்ரெய்லர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
