50 வீதமானவர்கள் விற்றமின் D குறைபாடுடன் காணப்படுகின்றனர்
6 view
கொழும்பு,செப் 08 நாட்டின் சனத்தொகையில் சுமார் 50 வீதமானவர்கள் விற்றமின் D குறைபாடுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. களுபோவில போதனா வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணர் மருத்துவர் நிரஞ்சலா மீகொட விதான இதனைத் தெரிவித்துள்ளார். விற்றமின் D குறைபாட்டால் மக்கள் பல்வேறு நோய்கள் மற்றும் துன்பங்களுக்கு உள்ளாகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சூரிய ஒளி மூலம் சாதாரண மக்கள் தங்களுக்குத் தேவையான விற்றமின் Dயைப் பெற முடியும் என்றும், இது மிகவும் எளிமையான முறையெனவும் அவர் கூறியுள்ளார்.ஒரு சராசரி நபர் வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் சூரிய ஒளியில் இருப்பது முக்கியமானது எனவும் மருத்துவர் நிரஞ்சலா மீகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
The post 50 வீதமானவர்கள் விற்றமின் D குறைபாடுடன் காணப்படுகின்றனர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 50 வீதமானவர்கள் விற்றமின் D குறைபாடுடன் காணப்படுகின்றனர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
