கஷ்டப்பட்ட வேளையில் இஷ்டப்பட்டு வந்தவள் என்னவள்– ‘குக் வித் கோமாளி’ புகழ்
6 view
‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலமாக மக்களிடையே பிரபலமானவர் புகழ். அதன் பின் அவருக்கு சினிமா வாய்ப்புக்கள் குவியத் தொடங்கியது. அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. குக்கு வித் கோமாளி புகழ் பென்ஸியா என்கிற இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் புகழே தன் காதலியை ரசிகர்களுக்கு சமூகவலைத்தளம் ஊடாக அறிமுகம் செய்தார். இந்தநிலையில் புகழுக்கும் பென்ஸிக்கும் எளிமையான முறையில் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. பென்ஸியா இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆரம்பத்தில் இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதும் இருவீட்டு சம்மதத்துடனே இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதுகுறித்து புகழ் தெரிவித்த நெகிழ்ச்சிப் பதிவில், ‘சிலர் அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. எனக்கு அதிர்ஷ்டம்தானானு சொல்லத் தெரியலை. வாழ்க்கையில ஏதாவது செஞ்சு முன்னுக்கு வந்துட மாட்டோமா என்கிற நினைப்பு எனக்குள்ள இருந்துட்டே இருந்தது. அந்த நினைப்பிலேயே உழைக்கவும் செய்தேன். எப்படியோ முட்டி…
The post கஷ்டப்பட்ட வேளையில் இஷ்டப்பட்டு வந்தவள் என்னவள்– ‘குக் வித் கோமாளி’ புகழ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கஷ்டப்பட்ட வேளையில் இஷ்டப்பட்டு வந்தவள் என்னவள்– ‘குக் வித் கோமாளி’ புகழ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
