விலைவாசி உயர்விலிருந்து மக்களைப் பாதுகாக்க புதிய திட்டங்களை அறிவித்தார் பிரதமர் ட்ரஸ்!
14 view
எதிர்வரும் மாதம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு பொதுவான வீட்டிற்கு எரிசக்தி விலை வரம்பு ஆண்டுக்கு 2,500 பவுண்டுகளாக நிர்ணயிக்கப்படும் என்று பிரதமர் லிஸ் ட்ரஸ் அறிவித்துள்ளார். மக்கள் அவையில் இன்று (வியாழக்கிழமை) எரிசக்தி கட்டணங்களுக்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து கூறுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கான எரிசக்தி விலை உயர்வைச் சமாளிப்பதாக உறுதியளித்ததை தற்போது செய்துள்ளேன். அவற்றைப் பாதுகாக்க புதிய விலை உத்தரவாதத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் உடனடியாக நகர்கிறது. இந்தத் திட்டம் சராசரி குடும்பத்திற்கு ஆண்டுக்கு 1,000 பவுண்டுகளை சேமிக்கும். முன்பு அறிவிக்கப்பட்ட 400 பவுண்டுகள் எரிசக்தி கட்டணத் தள்ளுபடியுடன் கூடுதலாக வரும். வணிகங்களுக்காக ஒரு புதிய ஆறு மாத திட்டம் இருக்கும். இது நுகர்வோருக்கு வழங்கப்படுவதற்கு சமமான ஆதரவை வழங்கும். அந்த ஆறு மாத காலத்திற்குப் பிறகு, அமைச்சர்கள் பாதிக்கப்படக்கூடிய தொழில்களுக்கு கவனம் செலுத்தும் ஆதரவை…
The post விலைவாசி உயர்விலிருந்து மக்களைப் பாதுகாக்க புதிய திட்டங்களை அறிவித்தார் பிரதமர் ட்ரஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விலைவாசி உயர்விலிருந்து மக்களைப் பாதுகாக்க புதிய திட்டங்களை அறிவித்தார் பிரதமர் ட்ரஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
