நடிகை தமிதா கைது – சஜித்திற்கும் நாமலுக்கும் இடையில் கருத்து மோதல்!
6 view
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று நாடாளுமன்றத்தில் கடும் வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டில் நடிகை தமிதா அபேரத்ன நேற்று கைது செய்யப்பட்டமை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். அப்பாவி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறையை நிறுத்துமாறும் நடிகை தமிதா அபேரத்னவை தடுத்து வைப்பதைத் தவிர்க்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். நாட்டில் இவ்வாறான அடக்குமுறைகள் தொடரும்போது அனைத்து அரசியல் கட்சிகளும் எவ்வாறு முன் வந்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவருக்குப் பதிலளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாட்டின் தற்போதைய சட்டங்களின்படி குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என…
The post நடிகை தமிதா கைது – சஜித்திற்கும் நாமலுக்கும் இடையில் கருத்து மோதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நடிகை தமிதா கைது – சஜித்திற்கும் நாமலுக்கும் இடையில் கருத்து மோதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
