கொழும்பு போராட்டத்தில்கூட எமது போராட்டம் பற்றி பேசி வலுச்சேர்க்காத அரசியல்வாதிகள்! உறவுகள் கவலை
16 view
கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் அரசியல்வாதிகள் கூட எமது போராட்டம் தொடர்பில் பேசி வலுச்சேர்க்கவில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின்போது, மாவட்ட சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று எங்களுடைய போராட்டம் 13 வருடங்களையும் தாண்டி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதில் நீதி கிடைக்கவில்லைனெ்பதால் இன்று, தனித்துவமாக போராட்டத்தை 8 மாவட்டங்களிலும் முன்னெடுக்க தொடங்கி 5 ஆண்டுகளை கடந்துள்ளது. 6வது வருடத்திலும் போராடிக்கொண்டிருக்கும் எமக்கு இலங்கை அரசாங்கமும் எந்தவொரு நீதியையும் தரவில்லை. இந்த நிலையில் ஜெனிவா கூட்டத்தொடருக்கு சென்றும் அங்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. எமக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் போராடிக்கொண்டே இருப்போம். அதேவேளை எமது போராட்டம் தனித்துவமாக ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 12ம் திகதி வெள்ளிக்கிழமை 2000ம் நாட்களை அடைகின்றது. அன்றைய தினம் மாபெரும் போராட்டமாக…
The post கொழும்பு போராட்டத்தில்கூட எமது போராட்டம் பற்றி பேசி வலுச்சேர்க்காத அரசியல்வாதிகள்! உறவுகள் கவலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு போராட்டத்தில்கூட எமது போராட்டம் பற்றி பேசி வலுச்சேர்க்காத அரசியல்வாதிகள்! உறவுகள் கவலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
