பொருளாதாரப் போராட்டத்திலும் நாங்கள் வெற்றி பெற வேண்டும்: ஆர்ப்பாட்டகாரர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி கருத்து!
21 view
“ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட நான் தயார். நாம் இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும். அந்தப் பொருளாதாரப் போராட்டத்தின் வெற்றிக்குப் போராட்டக் களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய நான் எதிர்பார்த்துள்ளேன்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருக்கும் இடையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனநாயக விரோத அரசியலையும் வன்முறையையும் நான் எதிர்க்கின்றேன். ஒடுக்குமுறைக்கு எதிராகச் செயற்படுபவர்கள், பல்கலைக்கழக செயற்பாட்டின் ஊடாக பகிடிவதையை நிறுத்தி சிறந்த சமூக ஜனநாயகத்தைக் கட்டியெழுப்பவும் முன்வர வேண்டும். இன்று நமது பல்கலைக்கழகக் கட்டமைப்பு சீர்குலைந்து இருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று பகிடிவதை ஆகும். வேலைநிறுத்தங்கள் எல்லாக் காலத்திலும் தொடர்ந்தன. வேலைநிறுத்தங்கள் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது.…
The post பொருளாதாரப் போராட்டத்திலும் நாங்கள் வெற்றி பெற வேண்டும்: ஆர்ப்பாட்டகாரர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொருளாதாரப் போராட்டத்திலும் நாங்கள் வெற்றி பெற வேண்டும்: ஆர்ப்பாட்டகாரர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
