காலத்தைக் கடத்தும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு கூட்டமைப்பினரும் ஒத்துழைப்பு- உறவுகள்
39 view
இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சை நடத்தியமையானது அரசாங்கத்தின் கபட நோக்கத்துக்கு மீண்டும் துணைபுரிவதாகவே அமைந்துள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் அமைப்பின் ஊடகபேச்சாளர் தமிழினி மாலவன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற செய்தியார் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கெதிரான குற்றங்களுக்கு காரணமானவர்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சை நடத்தியமையானது, ஒற்றையாட்சி அரசாங்கத்தை பலப்படுத்தி, கூட்டமைப்பின் கதிரை அரசியலுக்கு வெள்ளை அடிக்கும் செயலாகவே நாம் பாக்கின்றோம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, இனப்படுகொலை என்பன தொடர்பாக சர்வதேசமே விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாகும். இவை தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சை நடத்துவற்கான ஆணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழத்தமிழர் ஒருபோதும் வழங்கவில்லை. இலங்கை அரசாங்கம் உள்ளுர் பொறிமுறையின் மூலமாகத் தீர்வு காணப்படும் என தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில்,…
The post காலத்தைக் கடத்தும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு கூட்டமைப்பினரும் ஒத்துழைப்பு- உறவுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலத்தைக் கடத்தும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு கூட்டமைப்பினரும் ஒத்துழைப்பு- உறவுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
