கைதுகள் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான குரல்கள் அடக்கப்படுகிறது
6 view
கொழும்பு, ஓக 5 கொழும்பு, ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டப்பகுதியிலிருந்து போராட்டக்காரர்களை வெளியேறுமாறு பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, போராட்டக்காரர்கள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களின் தொடர்ச்சியான கைதுகள் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான குரல்களை அடக்குவதற்கு மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சிகள் மிகுந்த எச்சரிக்கையைத் தோற்றுவித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் கூறியிருப்பதாவது: பொது இடங்களில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கு மக்கள் கொண்டிருக்கும் உரிமைக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்கவேண்டும் என்பதுடன் அமைதிவழிப்போராட்டக்காரர்களைக் கலைப்பதற்கு அடக்குமுறை உத்திகளையோ அல்லது படையினரையோ பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். குறிப்பாக பொருளாதார நெருக்கடி தொடர்பில் பொறுப்புக்கூறுவதுடன் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 100 நாட்களுக்கும் அதிகமான காலம் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவந்த கொழும்பு, ‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டப்பகுதியிலிருந்து போராட்டக்காரர்களை வெளியேறுமாறு பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் நாம் கரிசனை கொண்டிருக்கின்றோம்.…
The post கைதுகள் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான குரல்கள் அடக்கப்படுகிறது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கைதுகள் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான குரல்கள் அடக்கப்படுகிறது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
