இலங்கை பொலிஸாருக்கு டிமிக்கி விட்டு தமிழகம் தப்பிச் சென்ற போலந்து நாட்டுக்காரர் கைது
17 view
சென்னை, ஓக 5 யாழ்ப்பாணத்தில் இருந்து இரப்பர் படகில் தமிழகத்திற்கு தனித்து தப்பிச் சென்ற போலந்து நாட்டவர் தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்பில் இருந்தாரா அல்லது இராணுவப் பயிற்சிகள் பெற்றாரா என்பது தொடர்பில் தமிழக பொலிசார் விசேட விசாரணைகள் நடத்தி வருகிறார்கள். அவரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி வேதாரணியம் பொலிசார் விடுத்த வேண்டுகோளை, வேதாரணியம் நீதிமன்றம் கடந்த 3ஆம் திகதி ஏற்றுக்கொண்டு, 3 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதியளித்தது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயம் உள்ள முனைக்காடு கடற்கரையில் கடந்த ஜூலை மாதம் 25ம் திகதி யாரும் இல்லாமல் ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. கரை ஒதுங்கிய படகை கைப்பற்றிய கடலோர காவல்படையினர் அது குறித்து விசாரித்து வந்தனர். அன்று இரவு வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறை பகுதியில் சந்தேகத்துக்கு உரிய முறையில் நடமாடிய நபரை பிடித்து விசாரித்ததில்…
The post இலங்கை பொலிஸாருக்கு டிமிக்கி விட்டு தமிழகம் தப்பிச் சென்ற போலந்து நாட்டுக்காரர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை பொலிஸாருக்கு டிமிக்கி விட்டு தமிழகம் தப்பிச் சென்ற போலந்து நாட்டுக்காரர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
