புத்தளத்தில் திடீரென சுகயீனமடைந்த பாடசாலை மாணவன் உயிரிழப்பு!
15 view
திடீர் சுகயீனம் காரணமாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்துள்ளார். புத்தளம் மன்னார் வீதியில் உள்ள ரகுமத் நகர் எனும் கிராமத்தைச் சேர்ந்த முபீத் முஹம்மத் ஷராப் (வயது 9) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 4 ஆம் தரத்தில் கல்வி கற்ற குறித்த மாணவன், இன்று வியாழக்கிழமை வழமை போல காலை பாடசாலைக்குச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பாடசாலையில் குறித்த மாணவன் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீரென சுகயீனமடைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த மாணவன் ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் உடனடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். எனினும், இன்று மாலை அந்த மாணவன் வீட்டில் இருந்த போது மீண்டும் சுகவீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த மாணவனின் தீடீர் மரணம்…
The post புத்தளத்தில் திடீரென சுகயீனமடைந்த பாடசாலை மாணவன் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் திடீரென சுகயீனமடைந்த பாடசாலை மாணவன் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
