போஹில் தோட்டத்துக்கு செல்லும் பாலம் உடைந்ததால் மக்கள் நிர்க்கதி!
6 view
நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்டகெட்டபுலா போஹில் கீழ்ப்பிரிவு தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளதால் இந்தத் தோட்டத்தை சேர்ந்த மக்களுக்கு தோட்டத்தில் இருந்து வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் கொத்மலை பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். போஹில் தோட்ட கீழ்ப்பிரிவில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 400 பேர் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் இந்தத் தோட்டத்திலிருந்து நாவலப்பிட்டி நகரில் உள்ள பாடசாலைகள், போஹில் த.வி,வெஸ்டோல் த.ம.வி ஆகிய பாடசாலைகளுக்குச் சென்று வருகின்ற 50 மாணவர்கள் உள்ளனர். இந்தத் தோட்டத்திலிருந்து வெளியிடங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்ற 100 க்கும் மேல் உள்ளனர். இவர்களின் பிரதான பாதையாக இருந்த சிறிய ரக பாலம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்…
The post போஹில் தோட்டத்துக்கு செல்லும் பாலம் உடைந்ததால் மக்கள் நிர்க்கதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போஹில் தோட்டத்துக்கு செல்லும் பாலம் உடைந்ததால் மக்கள் நிர்க்கதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
