காலி செய்யப்படுகிறது காலிமுகத்திடல் போராட்டக்களம்
14 view
கொழும்பு,ஓகஸ்ட் 04 நாளை (5) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு முன்னதாக காலிமுகத்திடல் போராட்ட தளத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்ததன் பிரகாரம் போராட்டக்காரர்கள் சில கூடாரங்களை அகற்றியுள்ளனர். இந்த கூடாரங்களை அகற்றும் பணி நேற்று இரவும் இன்றும் மேற்கொள்ளப்பட்டதுடன், இன்று பிற்பகல் சில கூடாரங்களை அகற்றும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.இதேவேளை, இது வரை போராட்ட பகுதியில் தங்கி முதலுதவி அளித்து வந்த புனித ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்களும் இன்று பிற்பகல் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
The post காலி செய்யப்படுகிறது காலிமுகத்திடல் போராட்டக்களம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலி செய்யப்படுகிறது காலிமுகத்திடல் போராட்டக்களம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
