கைது வேட்டை தொடர்ந்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் – அரசாங்கத்திற்கு சுமந்திரன் எச்சரிக்கை
14 view
மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களால் ஆட்சிப்பீடமேறிய புதிய அரசாங்கம், அந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்களை வேட்டையாடும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த அடக்குமுறையை அரசு உடன் நிறுத்த வேண்டும். இல்லையேல் அதற்கு எதிராக மக்களுடன் இணைந்து மாபெரும் போராட்டங்களில் ஈடுபடுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(4) நடைபெற்ற எதிரணிகளின் கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “புதிய அரசு மக்கள் மீது தொடர்ச்சியாக அடக்குமுறையைப் பிரயோகித்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் எழுச்சிப் போராட்டங்களால் நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்களினாலேயே இந்த அரசு ஆட்சியைக் கைப்பற்றியது. போராட்டக்காரர்களின் முதுகில் ஏறி ஆட்சியைக் கைப்பற்றியவர்கள், தற்போது அந்தப் போராட்டக்காரர்களையே வேட்டையாடத் தொடங்கியுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்க…
The post கைது வேட்டை தொடர்ந்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் – அரசாங்கத்திற்கு சுமந்திரன் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கைது வேட்டை தொடர்ந்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் – அரசாங்கத்திற்கு சுமந்திரன் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
