மீனவர்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு மன்னார் மாவட்டம் பூரண ஒத்துழைப்பு!
15 view
மீனவர்களின் அச்ச நிலையை போக்க கூடியவாறு கடற்றொழில் அமைச்சரின் பதிலில் திருப்தி இல்லையெனில் தேசிய ரீதியாக போராட்டத்தை முன்னெடுக்க உடன்பாடு கண்டிருக்கும் முல்லைத்தீவு மீனவர்களுடைய போராட்டத்திற்கு மன்னார் மாவட்டமும் முழு பங்களிப்பை செய்யும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று புதன்கிழமை(3) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்களை அழைத்து நேற்றைய தினம் (2) மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பாகவும் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வது தொடர்பாக நாங்கள் ஒரு கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டு இருந்தோம். இதில் மீனவ கூட்டுறவு சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், போன்றவற்றின் தலைவர், செயலாளர் கலந்து கொண்டார்கள். தேவன்பிட்டி தொடக்க மறிச்சிக்கட்டி வரை தலைமன்னார் தொடக்கம் மன்னார் வரையான பெரும் பாலான மீனவ சங்கங்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுடைய பல கருத்துக்கள்…
The post மீனவர்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு மன்னார் மாவட்டம் பூரண ஒத்துழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீனவர்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு மன்னார் மாவட்டம் பூரண ஒத்துழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
