இராணுவமயமாக்களை உடனடியாக நிறுத்துங்கள்-வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் கோரிக்கை!

37 view
மக்கள் தற்போது அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள்ளே சிக்கித் தவிக்கின்ற நிலையிலே இங்கே இராணுவமயமாக்கம் என்பது தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவருகின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலி கிழக்கு தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார். யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவி்த்தார். இன்றைய நிலைமையில் வடமராட்சியிலுள்ள வல்லையில் இராணுவத்தினர் உணவகங்களையும் கடைகளை அமைத்து வருகின்றனர். அதேவேளை மக்கள் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள் மக்கள் சிக்கித்தவிக்கும் இவ்வேளை வல்லையில் தற்போது இராணுவத்தினர் உணவகங்களையும் கட்டடங்களையும் அமைக்க வேண்டிய தேவை என்ன எழுகின்றது என்பது தொடர்பில் கேள்வியெழுப்புகின்றோம். தற்போதைய நிலையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் நிலையில் இங்கே தொடர்ச்சியாக இராணுவ மயமாக்கலும் இராணுவ செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றமை கண்டிக்கத்தக்கது. அதேவேளை தெற்கைப் பொறுத்தவரையில் அப்பாவி இளைஞர் மீதான தாக்குதல்கள் மற்றும் ஆர்ப்பாட்டகாரர்களின் மீதான தாக்குதல்கள்…
The post இராணுவமயமாக்களை உடனடியாக நிறுத்துங்கள்-வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース