நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம்.
6 view
நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம். பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக ஒரே பதவியில் கடமையாற்றி வந்த சில மாகாண திணைக்களத் தலைவர்களை வேறு திணைக்களங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்கவிற்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமைய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய, மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளராக கடமையாற்றிய திருமதி. ஆர்.வளர்மதி மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும், மாகாண கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய என்.சிவலிங்கம் மாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மாகாண கூட்டுறவு ஆணையாளராக கடமையாற்றிய ஏ.எல்.எம்.அஸ்மி கல்முனை மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாகாண கலாசார பணிப்பாளராக கடமையாற்றிய எஸ்.நவநீதன் மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளராக பணியாற்றிய…
The post நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம். appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
