சுமூகமாக எரிபொருளை விநியோகிக்க பொலிசார் ஒத்துழைக்க வேண்டும்! – யாழ். அரச அதிபர் கோரிக்கை!
16 view
யாழ் மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமூகமாக எரிபொருளை விநியோகிப்பதற்கு பொலிசார் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என அரச அதிபர் மகேசன், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகேவிடம் கோரிக்கை விடுத்தார். யாழ் மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குமுறையில் வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் தலைமையில இடம்பெற்றது. இதன்போதே மாவட்ட செயலளரால் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட செயலர் க.மகேசன், மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) முரளிதரன் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே, இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர் குணபாலச்செல்வன், இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபன வடபிராந்திய முகாமையாளர் சிவரதன் உட்பட பிரதேச செயலர்கள், கூட்டுறவுச்சங்க தலைவர்கள், எரிபொருள் நிரப்புநிலைய உரிமையாளர்கள் முகாமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். கலந்துரையாடலுக்கு பின்னர்…
The post சுமூகமாக எரிபொருளை விநியோகிக்க பொலிசார் ஒத்துழைக்க வேண்டும்! – யாழ். அரச அதிபர் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுமூகமாக எரிபொருளை விநியோகிக்க பொலிசார் ஒத்துழைக்க வேண்டும்! – யாழ். அரச அதிபர் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
