தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு; ஜனாதிபதியிடம் டக்ளஸ் முன்வைத்த 10 அம்சக் கோரிக்கைகள்!
31 view
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட காணிப் பிணக்குகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் சர்வ கட்சி அரசொன்றிற்கான பொது வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வகட்சி அரசொன்றை அமைப்பதற்கான பொது சேலைத்திட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பங்களிப்பை கோரிக்கையாக விடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்திற்கு பதிலளித்து தமிழ் மக்களின் சார்பில் பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து எழுதிய பதில் கடிதத்திலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் மேலும், நாட்டில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கும், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்கவுமான சவாலான பணியை முன்னெடுக்க அனைத்து அரசியல் கட்சிகள், நிபுணர்கள், சிவில் சமூகங்கள் போன்றவற்றின் பங்கேற்புடன் ஒரு பொது வேலைத்திட்டத்தை செயல்படுத்தும் தங்களின் கடுமையான முயற்சியை பாராட்டுகிறேன். எனது கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம், 19ஆவது…
The post தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு; ஜனாதிபதியிடம் டக்ளஸ் முன்வைத்த 10 அம்சக் கோரிக்கைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு; ஜனாதிபதியிடம் டக்ளஸ் முன்வைத்த 10 அம்சக் கோரிக்கைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
