எரி­பொ­ருள் நிரப்­பு­வ­தற்கு இனி­மேல் கட்­டுப்­பாடு! –யாழ். மாவட்­டச் செய­ல­கம்

16 view
முதன்­மு­றை­யாக எரி­பொ­ருள் நிரப்பு நிலைய உரி­மை­யா­ளர்­க­ளை­யும் அழைத்து யாழ். மாவட்­டச் செய­ல­கம் நேற்று நடத்­திய கலந்­து­ரை­யா­ட­லில் பல்­வேறு முக்­கி­ய­மான தீர்­மா­னங்­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. யாழ். மாவட்­டச் செய­லர் க.மகே­சன் தலை­மை­யில் நேற்று பி.ப. முக்­கி­ய­மான கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது. இதில் பிர­தேச செய­லர்­கள், இ.போ.ச. வட­பி­ராந்­திய முகா­மை­யா­ளர், இலங்கை பெற்­றோ­லி­யக் கூட்­டுத்­தா­ப­னத்­தின் வட­பி­ராந்­திய முகா­மை­யா­ளர், எரி­பொ­ருள் நிரப்பு நிலைய உரி­மை­யா­ளர்­கள், பொலி­ஸார் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர். நேற்று தொடக்­கம் ’கியூ­ஆர்’ அடிப்­ப­டை­யில் மாத்­தி­ரம் எரி­பொ­ருள் விநி­யோக நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இதனை ஒரு வாரத்­துக்கு அவ­தா­னித்து அதன் பின்­னர் கிராம அலு­வ­லர் பிரிவு ரீதி­யான எரி­பொ­ருள் விநி­யோ­கத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை ஆரா­ய­லாம் என்று முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பெரும்­பா­லான எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யங்­க­ளில் பொலி­ஸார் தமது தனிப்­பட்ட வாக­னங்­க­ளுக்கு எரி­பொ­ருள் நிரப்­பு­வ­தா­கக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது. அது தொடர்­பில் பிர­தேச செய­லர்­க­ளால், எந்­தெந்த பொலிஸ் நிலை­யத்­தி­னர் அவ்­வாறு நடந்து கொள்­கின்­ற­னர் என்ற விவ­ர­மும், பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ரி­டம் முன்­வைக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து…
The post எரி­பொ­ருள் நிரப்­பு­வ­தற்கு இனி­மேல் கட்­டுப்­பாடு! –யாழ். மாவட்­டச் செய­ல­கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース