சமூக வலைதளங்களில் இருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்!
7 view
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3-ஆம் திகதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் – விஜய் இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலக உள்ளதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்புடன் விரைவில் சமூக வலைதளப்பக்கத்திற்கு வருவேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
The post சமூக வலைதளங்களில் இருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமூக வலைதளங்களில் இருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
