ஆபத்தில் இந்தியத் தென்பிராந்தியம்?
6 view
இந்தியாவின் தென்பிராந்தியம் அடுத்துவரும் நாட்களில் ஆபத்தில் சிக்கப்போகும் சூழல்கள் அதிகரித்துள்ளன என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்தியத் தென்பிராந்தியம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆசியப்பிராந்தியமும், அமெரிக்கா, மற்றும் மேற்குலக நாடுகளின் சுதந்திரமான இந்துசமுத்திரத்தின் ஊடான கடற்பிராந்தியமும் தான் நெருக்கடிகளை எதிர்கொள்ளப்போகின்றது. ஆம், சீனாவின் யுவான் வாங் – 5 என்ற கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்கவுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 11ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரையில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நங்கூரமிடப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ‘சீனக் கப்பலுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆறு நாட்களுக்கு நங்கூரமிடப்பட்டு, தேவையான வசதிகளை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது’ என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். இதேநேரம், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சீன விஞ்ஞான ஆய்வு கப்பலான யுவான் வாங் 5 தொடர்பில் கடற்படைக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும், அது குறித்து தனக்கு போதுமான தகவல்கள் தெரியாது என்றும் கடற்படடைப்பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா…
The post ஆபத்தில் இந்தியத் தென்பிராந்தியம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆபத்தில் இந்தியத் தென்பிராந்தியம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
