பொருளாதார பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு தொழில் முயற்சியாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்-கிளி.அரச அதிபர் வலியுறுத்து!
18 view
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியான பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு தொழில் முயற்சியாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (29-07-2022) ஐக்கிய நாடுகள் பெண்கள் வலையமைப்பு chrysalis நிறுவனத்தினால் வியாபார சந்தையும் அனுபவ பகிர்வும் என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் -19 காரணமாக எமது பொருளாதார நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் தொழில் முயற்சிகளும் வியாபார நடவடிக்கைகள் மற்றும் சுய தொழில் முயற்சிகளை முன்னெடுப்பதில் நெருக்கடி நிலை காணப்படுகின்றது. ஆகவே தொழில் முயற்சியாளர்களாகிய நீங்கள் உங்களுடைய தொழில் முயற்சிகளை கைவிடாது அதனை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் அது எமது மாவட்டத்திற்கும் எமக்கும் நாட்டுக்கும் ஏற்படுகின்ற பொருளாதார ரீதியான பிரச்சினைகளில்…
The post பொருளாதார பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு தொழில் முயற்சியாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்-கிளி.அரச அதிபர் வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொருளாதார பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு தொழில் முயற்சியாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்-கிளி.அரச அதிபர் வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
