ஜூனில் ஏற்றுமதி வருமானம் 20 சதவீத்தினால் அதிகரிப்பு
17 view
கடந்த ஜூன் மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 1,208 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தெரிவிக்கிறது. இது இருபது சதவீதம் அதிகரிப்பாகும். ஆடைகள் மற்றும் புடவைகள், இறப்பர் தொடர்பான பொருட்கள், தேங்காய் சார்ந்த பொருட்கள், உணவு மற்றும் கடல் உணவுகள் ஆகியவற்றின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்ப இதற்கு முக்கிய காரணமாகும். ஆடை மற்றும் புடவை ஏற்றுமதி ஜூன் மாதத்தில் 566.78 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியது. தேயிலை ஏற்றுமதி 116.49 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது. இறப்பர் தொடர்பான பொருட்கள் ஏற்றுமதி மூலம் 102.36 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவிக்கிறது. பிறசெய்திகள்
The post ஜூனில் ஏற்றுமதி வருமானம் 20 சதவீத்தினால் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜூனில் ஏற்றுமதி வருமானம் 20 சதவீத்தினால் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
