உடுப்பிட்டி சிங்கமும்… உரும்பிராய் சிவகுமாரும்…
25 view
சிறப்புக் கட்டுரை இலங்கை தமிழர் போராட்ட வரலாற்றின் அன்றைய இரண்டு ஆளுமைகளின் மறைவு தினமான இன்றைய June 5ம் திகதி, அவர்கள் பற்றிய ஆழமான நினைவுகளை மீட்ட வைக்கிறது.1970,மற்றும் 1980ம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதிகளில். சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக செயல்பட்ட தமிழ் இளைஞர்கள் தொடர்பான பல வழக்குகள் இலங்கையின் பல நீதி மன்றங்களில் கூடுதலாக கொழும்பு சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டன..குட்டிமணி,தங்கத்துரை வழக்கு, துரையப்பா கொலைவழக்கு,பல வங்கிக் கொள்ளை வழக்குகள் இப்படி பல.இந்த வழக்குகளில் எல்லாம் நீதிமன்றங்களில் தன்னிலையாகவே முன்னிலையாகி கூடுதலானவற்றில் இளைஞர்களுக்கு விடுதலையையும் ,சிலவற்றில் நியாயத்தையும் பெற்றுக் கொடுத்த பெருமைக்குரிய பெருமகனார்,சட்ட விற்பன்னர் திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்து இன்றுடன் இருபது வருடங்கள் பூர்த்தி ஆகின்றன. அன்றைய காலங்களில்,நீண்ட நாட்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் மக்களால் தெரிவு செய்யபட்ட பிரதிநிதியாக இருந்த, ஆளுமை மிக்க அரசியல் வாதியான, உடுப்பிட்டி சிங்கம் என அன்றைய இளஞர்களால் விழிக்கப்பட்ட திரு,சிவசிதம்பரம் அவர்கள்…
The post உடுப்பிட்டி சிங்கமும்… உரும்பிராய் சிவகுமாரும்… appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உடுப்பிட்டி சிங்கமும்… உரும்பிராய் சிவகுமாரும்… appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
