கோட்டா கோ கம விவகாரம்; பதுங்கியிருக்கும் ஜோன்ஸ்டனை தேடி சி.ஐ.டி வலைவீச்சு
15 view
கோட்டா கோ கம , மைனா கோ கம மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய இரு சி.ஐ.டி. குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன. சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காவிந்த பியசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில், உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் இந்த இரு சி.ஐ.டி. குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுக்கள் குருணாகல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜோன்ஸ்டனை கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக சென்றுள்ள போதும், வெள்ளிக்கிழமை ( 3) மாலை வரை அவரைக் கைது செய்ய முடியவில்லை எனவும் அந்த தகவல்கள் தெரிவித்தன. கடந்த மே 09ஆம் திகதி அலரிமாளிகையில் ஒன்றுகூடிய அரசாங்கம் ஆதரவாளர்கள் இடையே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆவேசமாக உரையாற்றியிருந்தார். அந்த உரையை விசாரணை அதிகாரிகள் பிரபல உளவள நிபுணர்களான நீல் பெர்னாண்டோ, குணதாஸ…
The post கோட்டா கோ கம விவகாரம்; பதுங்கியிருக்கும் ஜோன்ஸ்டனை தேடி சி.ஐ.டி வலைவீச்சு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோட்டா கோ கம விவகாரம்; பதுங்கியிருக்கும் ஜோன்ஸ்டனை தேடி சி.ஐ.டி வலைவீச்சு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
