துமிந்த சில்வா விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்து – சட்டத்தரணிகள் சங்கம் வரவேற்பு
15 view
உயர்நீதிமன்றத்தினால் மரணதண்டனை உறுதிசெய்யப்பட்ட கைதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டபோது அதுகுறித்து சட்டத்தரணிகள் சங்கத்தினால் கண்டன அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய விடயங்களையும், துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்துமாறு நேற்று உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும் மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஏற்கனவே சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த முக்கிய விடயங்கள் வருமாறு: சட்டவிரோதமான ஒன்றுகூடல் மற்றும் கொலைக்குற்றச்சாட்டுக்களுக்காக மேல்நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டு, பிரதம நீதியரசர் ப்ரியஸாத் டெப் தலைமையிலான உயர்நீதிமன்ற நீதியரசர் குழாமினால் அத்தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட கைதியான துமிந்த சில்வாவிற்கு…
The post துமிந்த சில்வா விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்து – சட்டத்தரணிகள் சங்கம் வரவேற்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துமிந்த சில்வா விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்து – சட்டத்தரணிகள் சங்கம் வரவேற்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
