கொல்கத்தா இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மாரடைப்பு: பிரபல பின்னணி பாடகர் கேகே மரணம்
16 view
இந்தியா,ஜீன் 1 இந்தியாவின் புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவரான கேகே மாரடைப்பால் நேற்று (31) காலமானார். இந்தியத் திரையுலகின் பலமொழி பாடகர்களில் ஒருவரான கேகே என்று அழைக்கப்படுபவர் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பாடல்களை பாடியுள்ளார். கேரளாவை சேர்ந்த 53 வயதான பாடகர் கேகே, தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் 3,500 விளம்பரங்களுக்கு பாடல் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் இடம் பெற்ற ‘ஸ்ட்ராபெர்ரி கண்ணே’ பாடல் மூலம் தமிழில் கேகே அறிமுகமானார். அந்த பாடலை அவர் பெபிமணியுடன் இணைந்து பாடியிருப்பார். மேலும் யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், மணி சர்மா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் இசையிலும் தமிழில் அவர் பாடியுள்ளார். காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி),…
The post கொல்கத்தா இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மாரடைப்பு: பிரபல பின்னணி பாடகர் கேகே மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொல்கத்தா இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மாரடைப்பு: பிரபல பின்னணி பாடகர் கேகே மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
