அமெரிக்காவில் கர்ப்பிணிப்பெண்ணை சரமாரியாக சுட்ட பொலிசார்!
5 view
அமெரிக்காவில், பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தும், பொலிசார் அவரை ஐந்து முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒன்று வெளியாகி மனதை பதறவைத்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில், அமெரிக்காவிலுள்ள Kansas நகரில், கார் ஒன்றை ஆயுதங்களுடன் சிலர் கடத்திச் செல்வதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் கார் ஒன்றைத் துரத்திச் சென்றுள்ளார்கள். ஒரு கட்டத்தில் அந்தக் கார் நிற்க, அந்தக் காரிலிருந்து இறங்கிய சாரதி ஓட்டம் பிடித்துள்ளார். அதே நேரத்தில், மற்றொரு பெண் காரிலிருந்து இறங்கியுள்ளார். அவர், காரில் ஒரு துப்பாக்கி இருப்பதாகக் கூறியுள்ளார். அவரை பொலிசார் தரையில் படுக்குமாறு கூறியுள்ளார்கள். ஆனால், தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறிய அந்தப் பெண், தன்னால் தரையில் குப்புறப் படுக்க முடியாது என்று கூறியிருக்கிறார். பொலிசார் திரும்பத் திரும்ப அவரிடம் தரையில் படுக்குமாறு கூறியும் அவர் கேட்காததால், அவரை ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள் பொலிசார். இரத்தவெள்ளத்தில் கிடந்த அந்தப் பெண்ணுக்கு கைவிலங்கு…
The post அமெரிக்காவில் கர்ப்பிணிப்பெண்ணை சரமாரியாக சுட்ட பொலிசார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமெரிக்காவில் கர்ப்பிணிப்பெண்ணை சரமாரியாக சுட்ட பொலிசார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
