ரணிலுக்கு கடிதம் எழுதிய மனோகணேசன்
39 view
கொழும்பு,மே 30 நாட்டில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேவேளை ஏற்கனவே வாழ்வாதாரம் இல்லாமல் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கும் தோட்டங்களில் வாழும் மக்கள் மத்தியில் உணவு பஞ்சம் ஏற்படலாம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, நுவரெலியா, கொழும்பின் அவிசாவளை, பதுளை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, மாத்தளை, களுத்துறை, காலி, மாத்தறை, மொனராகலை, குருநாகலை ஆகிய மாவட்ட பெருந்தோட்டங்களில் வாழும் உழைக்கும் மக்கள் வருமானமின்றி நிர்க்கதி நிலையில் ஏற்கனவே பெருந்துன்பங்களை சந்தித்து வருகிறார்கள். நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடியினால், இன்னமும் சில மாதங்களில், உண்ண உணவின்றி நம் நாட்டில் பட்டினி சாவை சந்திக்க கூடியவர்களாக கணிக்க கூடியோர் பட்டியலில் முதன்மை நிலையில் இருப்போர் இவர்களே. “தொழிலாளர்கள்” என்ற அடையாளத்தால் இவர்களுக்கு முறையாக சமுர்த்தி…
The post ரணிலுக்கு கடிதம் எழுதிய மனோகணேசன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலுக்கு கடிதம் எழுதிய மனோகணேசன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
