பாக்குத் தெண்டல் உற்சவத்துடம் ஆரம்பானது வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

5 view
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு வருடங்கள் பக்தர்கள் ஆலயத்துக்கு வருகின்ற நிகழ்வானது தடை செய்யப்பட்டு, ஆலய நிவர்வாகத்தினர் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டளவில் ஆலய சம்பிரதாய கிரிகைகளை நடாத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இம்முறை கட்டுப்பாடுகள் அற்ற நிலையில் ஆலய கிரிகைகள் சிறப்புற ஆரம்பமாகியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஆர்ம்ப நிகழ்வாக இடம்பெறும் பாக்குத்தெண்டல் உட்சவம் இன்று அதிகாலை இடம்பெற்றது. முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து, வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுடன் நீண்ட தொடர்பை பேணி வந்த குடியானவர்களுக்கு மரவு வழியாக அறிவிப்பதற்காக, அவர்களது வீடுகளுக்கு சென்று பாக்குத்தெண்டல் இடம்பெற்றது. கண்ணகி தெய்வத்தின் பக்தனாகிய பக்தஞானி, தென்னிந்தியாவில் இருந்து, முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கிராமத்தில் தங்கியிருந்த…
The post பாக்குத் தெண்டல் உற்சவத்துடம் ஆரம்பானது வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース