ஆயிஷா படுகொலை – சேறு படிந்த சாரத்துடன் ஒருவர் கைது
15 view
பண்டாரகம அட்டுலுகமவில் ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரின் உடலின் பல பாகங்களிலும் நகக் கீறல்கள் காணப்படுகின்றன எனவும் அவரின் வீட்டின் படுக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சேறும் கதியுமான சாரம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸரால் தெரிவிக்கப்படுகிறது. இவர் கீரைத் தோட்ட தொழிலாளி எனத் தெரிவிக்கப்படுகிறது. குற்ற விசாரணை திணைக்களம் மற்றும் மேலும் ஐந்து பொலிஸ் குழுக்களின் கூட்டு முயற்சியில் இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.களுத்துறை பண்டாரகம அட்டுலுகம பகுதியில் காணாமற் போன 9 வயதான ஆயிஷா எனும் சிறுமி தனது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு கடந்த 27ஆம் திகதி காலை 10 மணியளவில் கோழி இறைச்சி வாங்கிச் சென்றிருந்தார். பின்னர் மறுநாள் அருகிலுள்ள சதுப்பு நிலமொன்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து…
The post ஆயிஷா படுகொலை – சேறு படிந்த சாரத்துடன் ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆயிஷா படுகொலை – சேறு படிந்த சாரத்துடன் ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
