சாணக்கியன் கூறியதைப்போல் மக்கள் வங்கியில் கடன் பெறவில்லை – தயா கமகே!

15 view
மக்கள் வங்கியில் இருந்து கடன் பெற்றுக்கொண்டு மூன்று வருடமாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தயா கமகே தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் உள்ள அவரது காரியாலயத்தில் சூநறறு (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “மக்கள் வங்கியில் இருந்து நான் அதிக பணம் கடன் பெற்றதாகவும் கடந்த வருடங்களாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சாட்டியிருந்தார். அவர் இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்றத்திலும் தெரிவித்திருந்ததுடன் பின்னர் ஊடக சந்திப்பொன்றின்போதும் தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத்தில் தெரிவித்த விடயத்துக்கு என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது. என்றாலும் ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கு எதிராக எனக்கு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அத்துடன் இன்றுகூட எனது…
The post சாணக்கியன் கூறியதைப்போல் மக்கள் வங்கியில் கடன் பெறவில்லை – தயா கமகே! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース