அட்டுலுகம சிறுமி மரணம்; இருவர் கைது!
4 view
பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளர் என்பது தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் இருந்து சேறு படிந்திருந்த நிலையில் சாரம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கீரை தோட்டத்தை அண்டிய காணியொன்றில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்தே, உயிரிழந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின் பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன. இதேவேளை, மரணம் தொடர்பில் பல பிரிவுகளின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மற்றும் 5 பொலிஸ் குழுக்கள் இணைந்து இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதற்கமைய, அப்பகுதியில் சி.சி.டி.வி கமராவின் காட்சிகள் மற்றும் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியிலுள்ள தொலைபேசி சமிக்ஞை கோபுரங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டார…
The post அட்டுலுகம சிறுமி மரணம்; இருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அட்டுலுகம சிறுமி மரணம்; இருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
