அரசியல்வாதிகள் வேண்டாம்; மக்களின் பிரச்சினைகளை தீர்க்க களத்தில் இறங்கும் தொழிற்சங்கங்கள்!
38 view
அரசியல்வாதிகளால் முன்னெடுக்க முடியாத பல விடயங்களை, எதிர்காலத்தில் வடக்கு, தெற்கு தொழில்சங்கங்கள் இணைந்து பேசி, பிரச்சினைகள் தொடர்பில் வெளிக்காட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஜோசப் ஸ்ராலின் தலைமையில், தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றுகூடல், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்க மண்டபத்தில் இன்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் தொடர்பில் ஊடங்களுக்கு சங்க பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் அதிலே வடக்கு, கிழக்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம், அத்துடன் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் போன்ற விடயங்கள் தொடர்பில் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. எதிர்காலத்தில் வடக்கு தொழில் சங்கங்கள் மற்றும் தெற்கு தொழில்சங்கங்கள் இணைந்து பேசி, எமது பிரச்சினைகள் தொடர்பில் வெளிக்காட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுத்து, அரசியல்வாதிகளால் முன்னெடுக்க முடியாத பல விடயங்களை அடிமட்ட…
The post அரசியல்வாதிகள் வேண்டாம்; மக்களின் பிரச்சினைகளை தீர்க்க களத்தில் இறங்கும் தொழிற்சங்கங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல்வாதிகள் வேண்டாம்; மக்களின் பிரச்சினைகளை தீர்க்க களத்தில் இறங்கும் தொழிற்சங்கங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
