அட்டுலுகம சிறுமி படுகொலை; அரசியல் தரப்பினர் இரங்கல்!

14 view
பண்டாரகம அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா எனும் குறித்த சிறுமி நேற்றுமுன்தினம் (27) அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாத நிலையில் அவரை சிறுமியின் தாய் தேடியுள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த கோழி இறைச்சிக் கடைக்கு முன்னாலிருந்த CCTV கெமராவை சோதனையிட்டபோது, சிறுமி கடைக்கு வந்து 10.12 மணிக்கு மீண்டும் திரும்பிச் செல்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து  பாணந்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகளும் அவர்களுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்றுமாலை குறித்த சிறுமிஇ அவரது வீட்டிற்கு அருகில் உள்ள பிரதேசத்தில் சதுப்பு நிலமொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். அங்கஜன் இராமநாதன் எம்.பி இரங்கல்! பண்டாரகம…
The post அட்டுலுகம சிறுமி படுகொலை; அரசியல் தரப்பினர் இரங்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース