பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு; புகையிரதக் கட்டணமும் உயர்வு?
14 view
குறைந்த புகையிரதக் கட்டணங்கள் உள்ளிட்ட இலங்கை புகையிரதத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அடுத்த வாரம் போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற்க் கொண்டு ரயில் டிக்கெட் விலையை உயர்த்தும் முடிவில் தமது தொழிற்சங்கம் உறுதியாக இருப்பதாக தொழிற்சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், விலை அதிகரிப்பு புகையிரத பயணிகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் போக்குவரத்து அமைச்சரிடம் முன்மொழிவுகளை வழங்க அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எரிபொருள் நெருக்கடி மற்றும் பஸ் கட்டண அதிகரிப்பு காரணமாக புகையிரதத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அலுவலக ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளது.எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களில் டிக்கெட் விற்பனை மூலமான வருமானமும் 10% அதிகரித்துள்ளது. பஸ் கட்டணத்தை விட ரயில் டிக்கெட்டின் விலை குறைவு என்பதால்…
The post பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு; புகையிரதக் கட்டணமும் உயர்வு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு; புகையிரதக் கட்டணமும் உயர்வு? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
