ட்ரில்லியன் கணக்கான ரூபா அச்சடிப்பு..! பணம் படைத்தோருக்கு சலுகையா?
15 view
நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ட்ரில்லியன் கணக்கான ரூபா நோட்டுக்கள் அச்சடிக்க வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறு நோட்டு அச்சடிப்பது பணம் படைத்த தனவந்தர்களுக்கு வரி சலுகை வழங்குவதற்கா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் ஒன்றினைந்த முன்னணியின் பிரதிநிதிகள் குழுவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸவை இன்று (27) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்ததோடு, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர். மக்கள் வங்கிக்கும், இலங்கை வங்கிக்கும் பணம் செலுத்த வேண்டிய பணம் படைத்த தனவந்தர்கள் பலர் நாட்டில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய அரசாங்கம் பணத்தை அச்சிடப் போகின்றதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு பணம் அச்சிடப்படும் போது வாழ்க்கைச் செலவு 40% உயரும் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி, ஆதரவற்ற மக்களே எனவும் அவர் கூறினார்.…
The post ட்ரில்லியன் கணக்கான ரூபா அச்சடிப்பு..! பணம் படைத்தோருக்கு சலுகையா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ட்ரில்லியன் கணக்கான ரூபா அச்சடிப்பு..! பணம் படைத்தோருக்கு சலுகையா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
