புதிய பிரதமரையும் நாடாளுமன்றத்தையும் தெரிவு செய்ய வேண்டும்! – அனுர
15 view
21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக புதிய அதிகாரங்கள் பிரதமருக்கும் நாடாளுமன்றத்திற்கும் கிடைக்கும் என்பதால், புதிய பிரதமர் மற்றும் நாடாளுமன்றத்தை தெரிவு செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற செய்தியளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த புதிய அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் உரிமை நாடாளுமன்றத்தில் உள்ள எந்த உறுப்பினருக்கும் கிடையாது. ஜனாதிபதி தொடர்பில் எமக்கு எப்படியான குறைப்பாடுகள், விமர்சனங்கள் இருந்தாலும் அவர் அந்த பதவிக்கு தகுதியற்றவர் என அவரே நிரூபித்து உறுதிப்படுத்தி இருந்தாலும், மக்கள் ஆணைக்கு அமைய அவர் அந்த பதவியை வகிக்க உரிமையுள்ளது. எனினும் 21வது திருத்தச் சட்டம் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்களில் குறிப்பிடத்தக்க அதிகாரங்கள் பிரதமருக்கு கிடைக்கும். ஆனால், தற்போதைய பிரதமருக்கோ, நாடாளுமன்றத்தில் வேறு எவரை பிரதமராக தெரிவு செய்தாலோ, அவருக்கு இந்த அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் தகுதியில்லை. விசேட அதிகாரம் உள்ள…
The post புதிய பிரதமரையும் நாடாளுமன்றத்தையும் தெரிவு செய்ய வேண்டும்! – அனுர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய பிரதமரையும் நாடாளுமன்றத்தையும் தெரிவு செய்ய வேண்டும்! – அனுர appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
