அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம்; இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்திற்கு கிடைத்த மகிழ்ச்சித் தகவல்
5 view
பிரியா – நடேசலிங்கம் என்ற இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்தினரை தொழிற்கட்சி தலைமையிலான அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் விடுவித்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அவர்கள் முன்பு வாழ்ந்த பிலோலா பகுதியிலேயே வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர்வு சட்டத்தில் உள்ள தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி இடைக்கால உள்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் அக்குடும்பத்தினருக்கு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளார். இதன் மூலம் அவர்கள் குடிவரவு நிலையில் உள்ள பிரச்சினை தீர்க்கப்படும் வரை அவர்கள் பிலோலா பகுதியிலேயே சட்டரீதியாக வசிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தமிழ் அகதி குடும்பம் பிலோலா பகுதிக்கு திரும்ப வேண்டும் பிலோலா பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த 2012ஆம் ஆண்டு படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013ஆம் ஆண்டு தஞ்சமடைந்திருந்த பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா,…
The post அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம்; இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்திற்கு கிடைத்த மகிழ்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம்; இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்திற்கு கிடைத்த மகிழ்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
