நான்கு மாத சினைப்பசு இறைச்சியாக்கப்பட்டது: பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை இல்லை
16 view
யாழ்ப்பாணம்,மே 27 நமது நிருபர் நான்கு மா சினைப்பசுவைத் திருடி இறைச்சியாக்கி விற்பனை செய்த மாபாதகச் செயல் வலி.மேற்கில் அரங்கேறியுள்ளது. பொன்னாலை வயலில் கட்டிநின்ற பசு மாடு ஒன்றே இரவோடிரவாகத் திருடப்பட்டு இவ்வாறு இறைச்சியாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இச்செயலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான விபரங்களை வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தெரியப்படுத்திய போதிலும் அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அகில இலங்கை சைவ மகா சபைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னாலையைச் சேர்ந்த பா.பராபரன் என்பவரின் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நான்கு மாத சினைப்பசு பொன்னாலையில் உள்ள அவரது வயற்காணியில் ஏனைய மாடுகளுடன் கட்டப்பட்டிருந்தது. கடந்த (21) சனிக்கிழமை இரவு குறித்த மாடு காணாமற்போயிருந்தது. இது தொடர்பாக மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து உரிமையாளர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இறைச்சிக் கடைகளுக்கும் சென்று, இறைச்சியாக்கும் மாடுகள் உள்ள…
The post நான்கு மாத சினைப்பசு இறைச்சியாக்கப்பட்டது: பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை இல்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நான்கு மாத சினைப்பசு இறைச்சியாக்கப்பட்டது: பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை இல்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
