சிறுபோகத்தில் 50 சதவீதமளவில் அறுவடை குறைவடையும்! – எதிர்வுகூறும் பேராசிரியர்
14 view
சிறுபோகத்தில், 50 சதவீதமளவில், அறுவடை குறைவடையக்கூடும் என பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார். 450,000 ஹெக்டேயர் அளவிலான நிலத்தில் நெற்செய்கை முன்னெடுக்கப்படும். சிறுபோக செய்கை குறைவடைந்துள்ள சூழ்நிலையில், 325 ஹெக்டேயர் பரப்பிலான விவசாய நிலத்தில் மாத்திரம் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரசாயன உரம் கிடைப்பது தொடர்பில், விவசாயிகள் மத்தியில் உள்ள நிச்சயமற்ற தன்மையே பயிர்ச்செய்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமைக்கு பிரதான காரணமாகும். இதன் காரணமாக, சிறுபோகத்தில் 50 சதவீதம் அளவில் அறுவடையில் வீழ்ச்சி ஏற்படும். முன்னர் தாங்கள் எதிர்வுகூறியது போன்று, எதிர்வரும் ஒக்டோபர் மாதமாகும்போது, எமது உற்பத்தியில், அவசியமான அரிசியை மக்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்படும் என பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில், தேவையான எஞ்சிய அரிசி தொகையை, உலக சந்தையிலிருந்து இறக்குமதி செய்து, மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய நிலைமை…
The post சிறுபோகத்தில் 50 சதவீதமளவில் அறுவடை குறைவடையும்! – எதிர்வுகூறும் பேராசிரியர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுபோகத்தில் 50 சதவீதமளவில் அறுவடை குறைவடையும்! – எதிர்வுகூறும் பேராசிரியர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
