இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சபாநாயகரைச் சந்தித்தார்!
16 view
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் சந்தித்தார். அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள புதிய பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தினால் முடியும் என தான் நம்புவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார். அதேபோன்று மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இலங்கை – ஐக்கிய அமெரிக்க நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜூலி சங் தெரிவித்தார். நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மேற்கொள்ளும் பணிகளை பாராட்டிய அவர் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் அவசியம் குறித்தும் கலந்துரையாடினார். இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்த ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கிவரும் பங்களிப்புக்குச் சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார். இந்சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார். ஜூலி சங் அவர்கள் இந்நாட்டுக்கான ஐக்கிய அமெரிக்க…
The post இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சபாநாயகரைச் சந்தித்தார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சபாநாயகரைச் சந்தித்தார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
